செய்திகள்

நீதிமன்ற உத்தரவு தொடர்பான பிரதமரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: ஹெல உறுமய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிடும் கருத்துக்கள் நீதி மன்றத்தை அவமதிப்பதை போன்றதென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது உரையாற்றிய அந்த கட்சியின் பிரசார செயலாளரான மேல் மாகாணசபை உறுப்பினர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.

நீதி மன்ற உத்தரவுக்கு சவால் விடுக்கும் வகையில் பிரதமர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் இங்குள்ள நீதி கட்டமைப்பில் நம்பிக்கையின்றியா இவ்வாறு கருத்து வெளியிடுவதாக கேள்வியெழுப்புவதாகவும் அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளப்ப போவதில்லையெனவும் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.