செய்திகள்

நுவரெலியாவில் பனிப்பொழிவு : மரக்கறி தொழில் பாதிப்பு

நுவரெலியாவில் சில இடங்களில்  ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகின்றதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு காலநிலை காணப்பட்டால் மரக்கறி வகைகளுக்கும் தேயிலை செடிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார். 

அந்தவகையில் கொட்டகலை பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதை இங்கு படங்களில் காணலாம்