செய்திகள்

நெருக்கடியை சந்தித்துள்ள அவுஸ்திரேலியாவின் மார்ச் 29 பயணம்

நியுசிலாந்து அணியின் வேகப்பந்துகளை சரியான விதத்தில் விளையாட தவறியதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் உலக கிண்ண கனவு எதிர்பாரத நெருக்கடிகளை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையுடன் இடம்பெறவுள்ள போட்டி கிளார்க்கின் வீரர்களுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.இந்த போட்டியில் தோற்றால் அவர்களது பிரிவில் அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.இதனால் அது அடுத்த சுற்றில் தென்னாபிரிக்காவை சந்திக்க நேரிடலாம்.

இங்கிலாந்தை தனது முதல் போட்டியில் ஆஸி அணி தோற்கடித்தவேளை இவ்வாறான நிலை தோன்றும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.எனினும் மழையால் பாதிக்கப்பட்ட பங்காளதேசுடனான போட்டியும், நியுசிலாந்துடனான தோல்வியும் அணியின் தலைவிதியை பாதித்துள்ளது.இலங்கையுடன் அவர்கள் வெற்றிபெற்றால் மார்ச் 29 ம்திகதியை நோக்கிய அவர்களது பயணம் இலகுவாகலாம்.ஸ்டார்க்கின் அபராமான பந்துவீச்சு காரணமாக ஆஸிஅணி வெற்றிக்கு அருகில் வந்துள்ள போதிலும் நி யுசிலாந்து பந்துவீச்சாளர்களை அவர்கள் எதிர்கொண்ட விதம் பழைய அச்சங்களை உயிர்பெறச்செய்துள்ளது.ஆஸி அணியின் சமீபத்தைய ஓரு நாள் துடுப்பாட்டம் நியுசிலாந்துடனான போட்டி வரை மிகச்சிறப்பானதாக காணப்பட்டபோதிலும்,ஆடுகளமும் மைதானமும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக விளங்கும் பட்சத்தில் அவர்கள் சிரமப்படுவது வழமையாகியுள்ளது.

during the 2015 ICC Cricket World Cup match between Australia and New Zealand at Eden Park on February 28, 2015 in Auckland, New Zealand.

2011 இல் கேப்டவுனில் 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அவுஸ்திரேலியா 2013 இல் இலங்கைக்கு எதிராக கபாவில் 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

நியுசிலாந்துடனான போட்டியில் ஆஸி வீரர்கள் ஆட்டமிழந்த விதம் குறித்து சேர்ன் வோர்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.நான்கு வீரர்கள் போல்ட் செய்யப்பட்டனர், ஒருவர் எல்பிடபில்யூ முறையில்ஆட்டமிழந்தார்.அவர்கள் ஆட்டமிழந்த விதமே எனக்கு கவலையளித்துள்ளது,நியுசிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியது . ஆனால் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு பெருமளவு பாதகமாக இருக்கவில்லை, பலர் போல்ட் செய்யப்பட்டதே கரிசனைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியுசிலாந்தின் முன்னாள் அணிதலைவர் ஸ்டீபன் பிளெமிங் ஆஸிவீரர்கள் அளவுக்கதிகமாக அடித்தாட முற்பட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.ஆரம்பத்தில் விக்கெட் விழுந்தால் நடுவரிசை ஆட்டக்காராகள் நிதானமாக ஆடியிருக்கவேண்டும் ஆனால் அதற்கு மாறாக அவர்கள் அடித்து ஆட முயன்றனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.