செய்திகள்

நெருக்கடியை திறமையாக சமாளிக்கும் அணிக்கே கோப்பை: இறுதிப்போட்டி குறித்து ரெய்னா கருத்து

நெருக்கடியை சிறப்பாக கையாளும் அணியே இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் என சென்னை அணியின் சுரேஸ் ரெய்னா தெரிவித்துள்ளார்

இந்த இறுதிப்போட்டி குறித்து சென்னை அணியின் அதிரடி வீரர் ரெய்னா கூறியதாவது:-

இறுதிப் போட்டி எங்களுக்கு நெருக்கடியாக இருக்காது என நான் நம்புகிறேன். அதேவேளையில் நாங்கள் எங்களுடைய அடிப்படை தகுதியுடன் யதார்த்தமாக விளையாடுவது தேவை.

எந்த அணி நெருக்கடியை சிறப்பாக கையாளுகிறதோ அந்த அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றும். சிறந்த பந்துவீச்சு வரிசையைக் கொண்ட எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

எங்களுடைய திட்டங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தி வருகிறோம். ஆகவே இறுதிப்போட்டிக்கு யதார்த்தமாக சென்று மகிழ்ச்சியாக விளையாட வேண்டும்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.