செய்திகள்

நேபாளத்தின் வரைபடத்திலிருந்தே அகற்றப்பட்டுவிட்ட கிராமங்கள்

நேபாளத்தை உலுக்கிய பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதியை நோக்கி மனிதாபிமான பணியாளர்கள் செல்லதொடங்கியுள்ள அதேவேளை அவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத பேரழிவை சந்திக்கவேண்டிவரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் சேதம் பலமடங்காக இருக்கும் என மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஓரு கிராமம் முற்றாக அழிந்துவிட்டதாக மனிதாபிமான பணியாளர் ஓருவர் தெரிவித்தார். அதேவேளை அதுபோன்று பல கிராமங்கள் முற்றாக அழிந்திருக்கலாம் என்ற அச்சமும் வெளியாகியுள்ளது.  பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதிகளை நோக்கி மனிதாபிமான அமைப்புகள் செல்லும்போது அழிவுகள் குறித்த உண்மையான நிலவரம் தெரியவரலாம் என ஐ.நா அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

கோர்கா, மற்றும் லம்யுங் கிராமங்களுக்கு அருகிலேயே பூகம்பம் மையம் கொண்டிருந்தது. டாக்காவிலிருந்து நான்கு மணிநேர பயணத்தில் செல்லக்கூடிய கோர்காவில்300000 மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்கள் உணவும் இருப்பிடமும் இல்லாத நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கிராமத்தின் 70 வீத வீடுகள் அழிந்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கோர்கா கிராமத்திற்கு மேலாக இந்திய உலங்கு வானூர்தியொன்றில் பயணம் செய்த இந்திய ஊடகவியலாளர் ஓருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளதை காண்பித்துள்ளன._82592632_82592630

கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதை,நேபாளத்தின் வரைபடத்திலிருந்தே அகற்றப்பட்டுவிட்டதை நாங்கள் பார்க்கின்றோம் என அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதி குறித்து வெளியான முதல்படங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.  போகாரா என்ற கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நபர் ஓருவரை கண்டேன்,1100 வீடுகளை கொண்ட அந்த கிராமத்தின் 90 வீதமான வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.  அந்த கிராமத்தில் 2000ற்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர் என மனிதாபிமான அமைப்பின் பணியாளர் ஓருவர் தெரிவித்துள்ளார்.  இதேபோன்று பல கிராமங்கள் இருக்கலாம், சில கிராமங்கள் முற்றாக அழிந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

_82592515_82592514கோர்க்காவில் உயிரிழப்புகள் அதிகமாக காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை காத்மண்டுவுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையில் மனிதாபிமான அமைப்புகள் உள்ளன. கோர்கா, லம்யுங் போன்ற நீண்ட தொலைவில் உள்ள மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதிகளுக்கு செல்வது பூகம்பத்திற்கு முன்னரே மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டது. மண் சரிவு காரணமாக தற்போது பாதைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளுக்குச் செல்ல 5 நாட்கள் எடுக்கலாம் என்கின்றனர் மனிதாபிமான பணியாளர்கள்.  சேதமடைந்த வீடுகளும்,பாடசாலைக்கட்டிடங்களுமே அப்பகுதியில் முக்கிய பிரச்சினை நேபாளத்தின் மேற்கு மலை பகுதியில் உள்ளதால் பூகம்பத்திற்கு முன்னரே அந்த பகுதிகளுக்கு வீதிகள் கிடையாது என மனிதாபிமான அமைப்புகளை சேர்ந்தவர்க்ள தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வடிவம்: சமகளம்