செய்திகள்

நேபாளத்தில் துயர்துடைப்பு பணியில் பங்கேற்ற இலங்கை படைக்கு ஜனாதிபதி பாராட்டு (படங்கள்)

நேபாளத்தில் துயர்துடைப்பு பணியில் பங்கேற்ற இலங்கை நிவாரண அணிக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கை நிவாரண அணிக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அத்துடன் முப்படை தளபதிகளுக்கு நினைவு விருதுகளும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பவ்சி, உள்ளிட்ட அதிதிகள் பலரும் மறைந்த இராணுவ உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

FB_IMG_1432020057165

FB_IMG_1432020061168

FB_IMG_1432020064731

FB_IMG_1432020076007

FB_IMG_1432020082326

FB_IMG_1432020087291

FB_IMG_1432020103135

FB_IMG_1432020105940

FB_IMG_1432020108988

FB_IMG_1432020120810