செய்திகள்

நேபாள பூகம்பம் காரணமாக இமய மலையின் உயரம் குறைந்துள்ளது

நேபாளத்தை அண்மையில் உலுக்கிய பூகம்பம் காரணமாக அங்குள்ள உலகின் மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மாபெரும் மலைத்தொடரான இமயமலையின் உயரம் ஒன்றரை மீற்றர்களினால் குறைவடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் இந்த மாற்றம் தானாகவே சரிசெய்யப்பட்டுவிடும் என்றும், இமய மலை தனது பழைய உயரத்தை அடைந்து விடும் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இமய மலையின் உயரம் ஒன்றரை மீற்றர்களினால் குறைவடைந்துள்ள போதிலும் இப்போதும் இமய மலையே உலகின் மிக உயர்ந்த மலையாக காணப்படுகிறது.