செய்திகள்

நேற்று மைத்திரியை சந்தித்த ஐ.ம.சு.கூவினர் இன்று மஹிந்தவை சந்திக்கவுள்ளனர்

20வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர்  இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளனர்.
நேற்று இரவு ஜனாதிபதியை சந்தித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூடட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் 20வது திருத்தம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக அவருடன் நீண்ட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பாக போட்டியிடவுள்ள தீர்மானம் மேற்கொண்டுள்ளமை தொடர்பாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுத் தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் கலந்துரையாட தீர்மானித்துள்ளனர். இதன்படி  இன்று காலை அவர்கள் அவரை சந்திக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.