செய்திகள்

நேற்று 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – பிரதேச விபரங்கள் உள்ளே

நாட்டில் நேற்றைய தினத்தில் 541 கொரொனா தொற்றாளர்கள் அரடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 304 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் கம்பஹா – 54, மகர – 67 , களனி -74, வத்தளை – 8, மிரிஸ்வத்த -2, ஜா-எல -74, பேலியாகொட -10 என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ளனனன
கொழும்பு மாவட்டத்தில் 191 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களில் 77 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் பியகம -63, வெல்லம்பிட்டிய 12, கொலன்னாவ -2 , அங்கொட -2 என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கேகாலை மாவட்டத்தில் தெரணியாகலவில் 1 , கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டியில் 1, பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல 1, புத்தளம் மாவட்டத்தில் தங்கொட்டுவ 1 என்ற ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். – (3)