செய்திகள்

நைஜீரியாவின் முக்கிய நகரம் மீது போஹோ ஹராம் தாக்குதல்

நைஜீரீயாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மைடுகுரி மீது போஹோ ஹராம் இஸ்லாமிய தீவிரவாதிகள் கடும் தாக்குதலை மேற்கொண்;டுள்ளனர்.
குறிப்பிட்ட நகரிற்கு வெளியே கடும்மோதல்கள் இடம்பெற்றுவருவதாகவும்,ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நைஜீரிய இராணுவம் விமானதாக்குதல்கi மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவி;க்கப்படுகின்றது.
பாரிய குண்டுசத்தங்களையும், துப்பாக்கிசத்தங்களையும் கேட்க முடிவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.ஆயிரக்கணக்கான மக்கள் தப்பிவெளியேறிக்கொண்டிருக்கின்றனர், படையினர் எதிர்தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை,பிரார்த்தனைகள் மாத்திரமே எங்களை காப்பாற்ற முடியும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.