செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுதலை

நைஜீரியாவில் கப்பம் பெறும் நோக்கில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த இலங்கை பொறியியலாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என விடுவிக்கப்பட்டவரின் மகள் உறுதிப்படுத்தி கூறியுள்ளார்.

இதனை நைஜீரியாவிற்கான இலங்கைத் தூதுவர் உறுதிசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 23 வருடங்களுக்கும் அதிகக்காலம் நைஜீரியாவிலுள்ள இத்தாலிய நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த இலங்கை பொறியியலாளர் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த 18 ஆம் திகதி பதிவாகியது.