செய்திகள்

நோயின் கொடுமை தாளாமல் முதியவர் தூக்கில் தொங்கினார்: ஊரெழுவில் சம்பவம்

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சொந்த இடமாகக் கெதாண்ட 72 வயது முதியவர் நோயின் கொடுமை தாங்க முடியாது இன்று திங்கட்கிழமை காலை 05.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஊரெழு வடக்கிலுள்ள கம்மாலையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த முதியவர் மயிலங்காடு அம்மன் கோயிலடியில் தச்சுத் தொழில் செய்து வரும் நிலையில் நேற்றிரவு வீட்டிற்குச் சென்று இரவு நேர உணவு உட்கொண்டுள்ளார்.காலை 05 மணியளவி;ல் தான் வேலைக்குச் சென்று வருவதாக மனைவியிடமும் பிள்ளைகளிடமும் தெரிவித்து விட்டுச் சென்றவர் இன்று திங்கட்கிழமை காலை(06.04.2015) ஊரெழு வடக்கிலுள்ள கற்பகம் மில்லடியின் கம்மாலையொன்றி; ல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த கம்மாலையின் உரிமையாளர் காலை 07.30 மணியளவில் வேலைக்காகச் சென்று பார்த்த போது குறித்த முதியவர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவது கண்டு சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்படி இடத்தைச் சேர்ந்த வைரமுத்து சண்முகலிங்கம்(வயது-72) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் மரணமானவராவார்.குறித்த முதியவர் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகியிருந்ததோடு கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரும் நோயின் கொடுமை காரணமாக வீட்டில் நஞ்சு குடித்துத் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த முதியவர் வீட்டின் கிணற்று வாளியோடு காணப்பட்ட கயிறை எடுத்து வந்தே தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

-யாழ்.நகர் நிருபர்