செய்திகள்

நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் இருந்த பொருட்களை வேறு இடங்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கடந்த அரசாங்கத்தினால் மக்களுக்காக பகிர்ந்தளிக்கும்படி வழங்கப்பட்ட பொருட்களை 17.02.2015 அன்று சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஆயூட்கால உறுப்பினரும் இலங்கை தொழிலாளார் காங்கிரஸின் பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும், இலங்கை தொழிலாளார் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் ஆகியோர் மேற்படி பொருட்களை நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் வைத்து மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் போது அட்டன் பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோவினால் குறித்த பொருட்களை பொது மக்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டாம் என உத்தரவு அறிக்கையின் பிரதி ஒன்று நோர்வூட் பொலிஸார் இ.தொ.கா பொது செயலாளார் ஆறுமுகன் தொண்டமானிடம் கையளித்தனா்.

அதன் அடிப்படையில் பகிர்தளிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் நோர்வூட் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் இந்த பொருட்களை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிக்கும், கால்நடை அமைச்சிக்கும் வழங்கும் படி அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பிரசாத் லியனகே 28.05.2015 அன்று உத்திரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் 04.06.2015 அன்று நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் இருந்த அப் பொருட்களில் சிலவற்றை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிக்கும், கால்நடை அமைச்சிக்கும் நோர்வூட் பொலிஸாரினால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் தோட்ட தொழிலாளிகளுக்கு சீமெந்து இயந்திரம், தகரம், கூடாரங்கள், கதிரைகள் உட்பட பல பொருட்கள் 17.02.2015 அன்று பகிர்ந்தளித்துக்கொண்டிருக்கும் போது அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இதனை பகிர்ந்தளிக்க வேண்டாம் என நீதமானினால் உத்தரவு விடப்பட்டிருந்தது.

அதன் போது குறித்த பொருட்கள் சம்மந்தமாக சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஜந்து உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது நோர்வூட் மைதானத்தில் இருக்கும் பொருட்களில் சட்டபூர்வமான நீதியான முறையில் காணப்படும் பொருட்களை சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கும் சட்டபூர்வமற்ற நீதியற்ற முறையில் காணப்படும் பொருட்களை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிக்கும், கால்நடை அமைச்சிக்கும் வழங்கப்படும் படி கடந்த 28த் திகதி அட்டன் நீதவான் இவ்வாறு உத்திரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

DSC09241 DSC09245 DSC09248 DSC09259 DSC09269 DSC09272 DSC09277