செய்திகள்

நோர்வேயின் சமாதான முயற்சி பற்றிய நூல் செப்டெம்பரில்

‘To end a civil war’ இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகளை விபரிக்கும் நூல் ஒன்று செப்டெம்பர் மாதம் வெளிவரவிருப்பதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

To end a civil war என்ற தலைப்பில், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நோர்வேயின் சமாதான முயற்சிகளை இந்த நூல் விபரிக்கிறது. மார்க் சோல்ட்டர் (mark salter) என்ற ஆய்வாளர் இந்த நூலை எழுதியுள்ளார். இலங்கையில் அமைதியைக் கொண்டு வர எவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை, இந்த நூல் விபரிக்கிறது.