செய்திகள்

பகீரதி பிணையில் விடுதலை

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலி பிரிவின் தலைவியென்ற குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட பகீரதி முருகேசுவை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இவரை வெள்ளிக்கிழமை (13) பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகளின்  முன்னாள்  உறுப்பினர்கள், புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்வதாக பொலிஸார் நீதிவானின் கவனத்திற்குக்  கொண்டுவந்தனர். அத்துடன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸாரின் விசாரணை முடிவடையும் வரை பிணையில் செல்ல அனுமதி வழங்கலாமெனவும், ஆனால் விடுதலை செய்யக்கூடாதெனவும் சட்ட மா அதிபர் சார்பில்  மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி  நீதிவானிடம் தெரிவித்தார். இவற்றினை கருத்தில் கொண்ட நீதிவான், அவரைப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையும் கடைசி ஞாயிற்றுக்கிழமையும்  பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=lEcgEs9-wng” width=”500″ height=”300″]