செய்திகள்

பங்களாதேசிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

பங்களாதேசிற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

பங்களாதேஸ் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அசார் அலி (226)இ யூனிஸ்கான் (148) அசாத் ஷபிக் (107) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 557 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளசேதம் 3-வது நாள் ஆட்டத்தின்போது 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. எனினும் பலோஓன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

CRICKET-BAN-PAK
இதையடுத்து 550 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஸ் 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அசார் அலி தேர்வு செய்யப்பட்டார்