செய்திகள்

கிண்ணியா நகரசபை தவிசாளர் கைதானார்!

படகுப் பாதை விபத்துச் சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த படகுப் பாதைக்கு அனுமதி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

இதேவேளை விபத்து சம்பவம் தொடர்பில் நேற்றைய தினத்தில் படகின் உரிமையாளர், படகை இயக்கியவர் மற்றும் கட்டணம் அறவிடுபவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)