செய்திகள்

படப்பிடிப்பில் முகத்தில் அடிபட்டது நீது சந்திராவுக்கு

வைகை எக்ஸ்பிரஸ் ஷுட்டிங் வளசரவாக்கத்தில் நடைபெற்று வருகிறது.

ஆர் கே, நீதுசந்திரா, இனியா, சுஜா வாருணீ, கோமல் ஷர்மா ஆகியோர் நடித்துக்கொண்டிருந்தனர். நீதுவுக்கும் நடிகர் பவனுக்கும் இடையே நடக்கும் கைகலப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இதில் நடிகர் பவனின் டைமிங் மிஸ்ஸானதில் நீதுவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. கோடு விழுந்த முகத்தில் ரத்தம் வழிந்தது. சக நடிகைகள் நீதுவுக்கு உதவினர். ஆனால் இதை ரொம்ப ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டு நடிக்க தயாரானார்.