செய்திகள்

பணக்கார வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கு HSBC உதவியதாக குற்றச்சாட்டு

மிகப்பெரிய வங்கியான HSBC உலகம் முழுவதும் பணக்கார வாடிக்கையாளர்கள் பல நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வரியை ஏய்ப்பு செய்வதற்கு உதவியுள்ளதாக பி.பி.சி பனோராமா நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

203 நாடுகளில் HSBC கொண்டிருந்த 106,000 வாடிக்கையாளர்கள் கணக்குகளை பனோராமா பார்வையிட்டிருந்தது. இதில் சுமார் 7000 பிரித்தானிய வாடிக்கையாளர்களின் விபரங்களும் உள்ளடங்குகிறது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் இருந்த தனது கட்டுப்பாட்டு ரீதியான குறைபாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள HSBC, தற்போது இது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் “அடிப்படையில் மாற்றம்” ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

HSBC வங்கி அமைந்துள்ள இங்கிலாந்து, அமெரிக்க, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் அர்ஜென்டீனா ஆகிய நாடுகளில்அது வரி ஏய்ப்பு சம்பந்தமான குற்றவியல் விசாரணைகள் தற்போது எதிர்கொண்டுவருவதுடன் இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் தயாராகவுள்ளதாக அறிவுதுள்ளது. ஆனால், HSBC இன் தலைமை காரியாலயம் அமைந்துள்ள பிரித்தானியாவில் இந்த விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.