செய்திகள்

பணத்துக்காக 14 வயது மகளை காமுகர்களுக்கு விற்ற தாயொருவர் கைது

தனது 14 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவிக்கப்படும் பெண்ணொருவர் களுத்துறை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது மகளை பணத்துக்காக பல்வேறு நபர்களுடன் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக சிறுவர்களை தெளிவுபடுத்தும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் அந்த பிரதேசத்தில் முன்னெடுத்த நிகழ்ச்சியொன்றின் போது குறித்த சிறுமி அந்த விடயத்தை பொலிஸாருக்கு கூறியதையடுத்தே அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.