செய்திகள்

பண்டத்தரிப்புப்பில் போதைப் பொருள் வைத்திருந்தவர்களும் பொது இடத்தில் மது அருந்தியவர்களும் கைது.

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரும்,பொது இடத்தில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டில் இருவருமாக நால்வர் நேற்று முன்தினம் 11 ஆம் திகதி வியாழக்கிழமையிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டத்தரிப்பு நகரப் பகுதியில் கஞ்சா கலந்த போதை மாவினை வைத்திருந்தவரும்,2 கிராம் கஞ்சாவினைத் தன்வசம் வைத்திருந்தவருமாக இருவர் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் பொதுவிடத்தில் போதைப் பொருள் அருந்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை,பண்டத்தரிப்புப் பகுதியில் அண்மைக்காலமாகக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-