செய்திகள்

பந்துவீச்சில் பலவீனமான நிலையில் மும்பாய் இந்தியன்ஸ்

கிரிக்கெட் உலகின் கவனம் இந்த வாரம் 2015 ஐபிஎல்லினை நோக்கி திரும்புகின்றது.முதலாவது போட்டியில் 2013 சம்பியனான மும்பாய் இந்தியன்ஸ் அணி நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கின்றது.

கொல்கத்தா அணி முழுமையான அணிபோல தென்படுகின்ற அதேவேளை மும்பாய் இந்தியன்ஸ் அணியின் பநது வீச்சு குறித்து கேள்விகள் உள்ளன.

மும்பாய் அணியின் மூத்த சுழற்பந்தவீச்சாளர் ஹர்பஜன்சிங் கடந்த வருடம் போன்று பந்துவீச்சில் மீண்டும் அசத்தவேண்டியிருக்கும்.கடந்த வருடம் பின்னணியில் இருந்த அணி அவரின் பந்துவீச்சு காரணமாகவே மிகவேகமாக முதல்நான்கு அணிகளில் ஒன்றாக மாறியது.ஹர்பஜன் கடந்த தடவை 14 விக்கெட்களை வீழ்த்தினார்.அவரது அணியின் சகவேகப்பந்து வீச்சாளர் மலிங்க 16 விக்கெட்களை வீழ்த்தினார்.எனினும் 2015 உலககிண்ண போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.

இருவரும் சிறப்பாக விளையாடத பட்சத்தில் அணியை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பு ஆஸி அணியின் ஹசெல்வூட்டிற்கு செல்லும்.எனினும் அவரால் அது முடியுமா என்பது முக்கியமான கேள்வி.
தங்களுடைய பந்துவீச்சாளர்களின் பலவீனத்தை அறிந்தே மும்பாய் இந்தியன்சின் நிர்வாகம் முன்னாள் ;நியுசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் சேன் பொன்டினை ஆலோசகராக இணைத்துக்கொண்டுள்ளது.அணியின் பயிற்றுவிப்பாளராக ரிக்கிபொன்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை அணி தனது தலைவர் ரோகித்சர்மாவையே பெரிதும் நம்பியிருக்கின்றது,அவரிற்கு அம்பதி ராயுடு பலம்சேர்க்கின்றார்.