செய்திகள்

பம்பலப்பிட்டி தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் சடலமொன்று மீட்பு

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பெரடைஸ் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் ஆணொருவரின்  சடலம்  மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வசித்து வந்த 45 வயதுடைய அவுஸ்திரெலிய பிரஜையான  இலங்கை தமிழர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பாக விசரணைகளை நடத்தி வருகின்றனர்.