செய்திகள்

பயணக்கட்டுப்பாடு தொடர்பான தெளிவுப்படுத்தல்!

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் மக்களிடையே காணப்படும் குழப்ப நிலையால் அது தொடர்பில் அரசாங்கத்தினால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (12) இரவு 11 மணிமுதல் நாளை (13) அதிகாலை 4 மணிவரையில் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (அது அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது)

இதேவேளை நாளை 13ஆம் திகதி இரவு 11மணிமுதல் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில், வீட்டை விட்டு வெளியேற முடியாத வண்ணம் பயணத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அவசியமற்று யாரும் வெளியே செல்ல முடியாது.

அத்துடன் பயணக்கட்டுப்பாடு இல்லாத மற்றைய நேரங்களில் (நாளைய தினம் உட்பட) எதிர்வரும் 31ம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளற்றோர் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் இறுதி இலக்கத்தை அடிப்​படையாகக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறலாம்.

அ​வற்றின் இறுதி இலக்கமாக 1,3,5,7,9 ஆகியன இருந்தால், ஒற்றை எண்களைக் கொண்ட நாள்களில் வீட்டை விட்டு வெளியேறலாம்.

0,2,4,6,8 ஆகிய இலக்கங்கள் இருந்தால், இரட்டை எண்களைக் கொண்ட நாள்களில் வீடுகளிலிருந்து வெளியேறலாம்.

இந்த பயணங்கள் முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கும் 13 -17 திகதிகளுக்கு முழுமையாக பொருந்தாது.
-(3)