செய்திகள்

பயணக் கட்டுப்பாட்டை நீக்கியதும் வீட்டில் இருந்து இருவருக்கு மட்டுமே வெளியில் செல்ல முடியும்!

நாளை முதல் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் வீட்டில் இருந்து வெளியில் செல்வதற்கு இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணக் கட்டுப்பாட்டை தளர்த்திய பின்னர் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் தொடர்பான அறிவித்தலிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதன்படி வீட்டில் இருந்து இருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும். வாடகை வாகனங்களில் இரண்டு பயணிகளுக்கு மாத்திரமே பயணிக்க முடியும். பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமான பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது. மணமகன், மணமகள் அடங்கலாக 10 பேருடன் பதிவுத் திருமணத்தை நடத்த முடியும்.

மரண நிகழ்வுகளின் போது 24 மணி நேரத்திற்குள் இறுதிக் கிரியைகளை நடத்த வேண்டும். இறுதிக் கிரியையில் 15 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள அனுமதி உள்ளது.

அத்துடன் திரையரங்குகள், வழிபாட்டு இடங்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.
-(3)