செய்திகள்

பயணத்தடை 14 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்க தீர்மானிக்கவில்லை: இராணுவத் தளபதி அறிவிப்பு

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடையை ஜுன் 14 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

பயணத்தடையை 14 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதுவரையில் பயணத் தடையை நீடிக்க முடிவெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி மே 21 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை ஜுன் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
-(3)