செய்திகள்

பருத்தித்துறை கடலில் 417 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனை பகுதியில் 417 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகொன்றில் கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு கடற்படையினர் குறித்த கப்பலை சோதனையிட்ட போது அதில் இருந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 125 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-(3)