செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு

வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியில் வைத்து நேற்று இரவு 7 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இனந்தெரியாத சிலர் குறித்த உறுப்பினரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணையை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(15)