செய்திகள்

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று

கடந்த சில நாள்களாக பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றது.அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை, உத்தியோகத்தர்கள் 17 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மீளவும் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(15)