செய்திகள்

பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலிற்கமைய மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக சந்தைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலிற்கமைய மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)