செய்திகள்

பலத்த காற்று வீசியதால் வீடுகள் சேதம் (வீடியோ)

பொலன்னறுவை அத்தனகடவல பகுதியில் நேற்றையதினம் முதல் பலத்த காற்று வீசுவதால் அங்குள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒரு வீட்டின்மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளதுடன் மேலும் ஒரு வீட்டின் கூரைகள் உடைந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சேதமடைந்து வீட்டில் வசித்து வந்தவர்கள் தற்பொழுது அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, மன்னம்பிடிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக அங்குள்ள இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=vUX0IoXx1EM&feature=youtu.be” width=”500″ height=”300″]