செய்திகள்

பல்கலைக்கழக புதிய கல்வியாண்டு மாணவர் சேர்க்கை! நுழைவுப் படிவ நுால் இன்று வெளியீடு

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் புதிய கல்வியாண்டுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்காக வெளியிடப்படும் முதலாவது நுழைவுப் படிவ நூலானது இன்று வெளியிடப்படவுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதிபெற்றவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்கு விண்ணப்பிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிநுட்பப் பிரிவில் கற்கையை முன்னெடுக்கவுள்ள மாணவர்களுக்கு புதிதாக 30 பாடவிதானங்களை உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பம் வெளி வருகின்றமை தொடர்பிலான விளம்பரமானது பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.