செய்திகள்

பஸில் நாடு திரும்பினார்: மகிழ்ச்சியில் பொதுஜன பெரமுனவினர்

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ ஒரு மாதத்தின் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

இன்று காலை நாடு திரும்பிய அவர் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமைய தனிமைப்படுத்தலை பின்பற்றவுள்ளார்.

இதேவேளை இவரின் வருகை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இதன்படி இனி அதனை வழங்க முடியுமாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
-(3)