செய்திகள்

பஸ் மீது காட்டு யானை தாக்குதல் : இரு ஆசிரியைகள் உட்பட மாணவி காயம் (படங்கள்)

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு கல்விச்சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களின் வாகனத்தின் மீது காட்டு யானை தாக்கியதில் ஒரு மாணவியும் இரண்டு ஆசிரியைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிங்குரங்கொடை ஆனந்த மகளிர் கல்லூரியின் மாணவர்கள் பயணித்த வாகனத்தை காட்டு யானை 23.05.2015 அன்று காலை தாக்கியுள்ளது.

இச் சம்பவம் தம்புள்ளை, திகம்பதாவ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வாகனத்தில் 12 மாணவிகள் இருந்துள்ளனர். அதில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில தினங்களில் இவ்வாறு மூன்று சம்பவங்கள் இடம் பெற்றள்ளமை குறிப்பிடத்தக்கது.

Elephant  (1) Elephant  (2) Elephant  (4) Elephant  (5)