செய்திகள்

பாகிஸ்தானில் மனைவி மீது அசிட் வீசியவருக்கு 46 ஆண்டு சிறை

பாகிஸ்தானில் லாகூரை அடுத்த ஹெராகட் நகரை சேர்ந்தவர் மிர்ஷா ஆசிம் பெய்க். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

இருந்தும் அவர் மீதான கோபம் மிர்ஷா அசீமுக்கு குறையவில்லை. ஆத்திரம் அடைந்த அவர் தனது முன்னாள் மனைவி மீது ‘ஆசிட்’ (திராவகம்) வீசினார்.

அதில் மனைவியின் முகம் மற்றும் உடல் வெந்தது. அவரது 2 கண்களும் பார்வையிழந்தது. அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மிர்ஷா அசீம் மீது லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 46 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்து மேலும் அவருக்கு ரூ. 20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.