செய்திகள்

பாகிஸ்தானில் 260 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணம் பலுசிஸ்தான் மற்றும் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் 260 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய மதிப்பில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

‘‘பாகிஸ்தான் போதைப்பொருள் தடுப்பு படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கராச்சி, சாஹி மற்றும் பலுசிஸ்தானில் உள்ள கிலா அப்துல்லா பகுதியில் பஸ் மூலம் கடத்தப்பட்ட 11 டன் போதைப்பொருளை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 260 கோடி ரூபாயாகும்.

10.6 டன் ஹசிஸ், 517 கிலோ போர்பைன், 55 கிலோ மரிஜூயனா வகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் போதைப்பொருள் தடுப்பு படையின் வரலாற்றிலேயே இதுதான் அதிக அளவு பறிமுதல் செய்யப்பட்டவையாகும்’’ என்று போதைப்பொருள் தடுப்பு படை செய்தி தொடர்பாளர் கூறினார்.