செய்திகள்

பாகிஸ்தான் இராணுவ தளபதி 5ம் திகதி இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் ரகீல் ஷரீப் எதிர்வரும் 5ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் இங்கு வரவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் இராணுவ தளபதி 5 நாட்கள் இங்கு தங்கியிருக்கவுள்ளதுடன் இதன்போது ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது.