செய்திகள்

பாக்கிஸ்தானில் 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

பாக்கிஸ்தானில் இராணுவத்தினரின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அணைக்கட்டொன்றின் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த 20 தொழிலாளர்கள் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பாக்கிஸ்தானின் தென்-மேற்கு பலூச்சிஸ்தான் பிராந்தியத்திலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.
மெய்ப்பாதுகாவலர்களை தாக்கிதமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் துப்பாக்கிதாரிகள் இவர்களை கொலை செய்துள்ளனர்.
பலூச்சிஸ்தானின் பிரிவினைவாத குழுவொன்று இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
பலூச்சிஸ்தான் விடுதலை முன்னணி என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.இராணுவத்தையும் அதன் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் இலக்குவைத்தே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அந்த பகுதியை சேராதவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார்,இதன் காரணமாக இது இலக்குவைக்கப்பட்ட கொலை என தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்களை வரிசையாக நிற்கவைத்து பின்னர் அவர்களை பிரிவினைவாதிகள் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.