செய்திகள்

பாக்கு நீரிணையை இருபுறங்களில் இருந்தும் கடந்து இலங்கை விமானப் படை வீரர் சாதனை

பாக்கு நீரிணையை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையும் பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் வரையும் கடந்து இலங்கை விமானப் படையின் நீச்சல் வீரர் ரொஷான் அபேசுந்தர சாதனை புரிந்துள்ளார்.

ரொஷான் அபேசுந்தர இருபுறங்களில் இருந்தும் 59.3 கிலோமீட்டர் தூரத்தை 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்களில் கடந்துள்ளார்.

இதற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டில் ‘ஆழிக்குமரன்’ என அழைக்கப்படும் குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையினை இரு புறங்களில் இருந்தும் 51 மணித்தியாலங்களில் கடந்து சாதனை படைத்திருந்தார்.

இதன்படி இவரின் சாதனையை சாதனையை ரொஷான் அபேசுந்தர இன்று முறியடித்துள்ளார்.
-(3)