செய்திகள்

பாடசாலைகளில் போதைப் பொருள் ஒழிப்பு குழுவை அமைக்க திட்டம்

சகல பாடசாலைகளிலும் போதைப் பொருள் ஒழிப்பு குழுவொன்றை அமைப்பதற்கு அபாயகரமான ஒளடத கட்டுபாட்டு சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி இது வரை 100 பாடசாலைகளில் அந்த குழுவை அமைத்துள்ளதாக அபாயகரமான ஒளடத கட்டுபாட்டு சபையின் தலைவர் வைத்தியர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக மாணவர்களை தெளிவுபடுத்தும் வகையிலும் மற்றும் மாணவர்கள் அதற்கு அடிமையாவதிலிருந்து தடுக்கும் வகையிலுமே இந்த குழு அமைக்கப்படவுள்ளது.