செய்திகள்

பாடசாலைகளை இப்போதேக்கு திறக்க முடியாது – கல்வி அமைச்சர்

கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது. மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.பாடசாலைகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தற்போதைய நிலைமையில் பாடசாலைகளை உடனடியாக திறக்க முடியாத நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.(15)