செய்திகள்

பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் பதில்!

பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கே எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையினருடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மேல் மாகாணத்தில் அந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் விரைவில் மற்றைய மாகாணங்களிலும் அதனை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-(3)