செய்திகள்

பாடசாலையில் தீவிபத்து: திருக்கோயிலில் சம்பவம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கல்லூரியின் மேல்மாடிக்கட்டிட மொன்றில் திடீரென தீப்பற்றியதில் பாரிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலையின் இலத்திரனியல் பிரிவு இருந்த அறையே இவ்வாறு தீ பற்றியுள்ளது.
45 க்கும் மேற்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் 3 ஸ்கேனர் என்பன தீயில் கருகியுள்ளன.
மாலைப்பொழுதில் தீ ஏற்பட்டதால் மாணவர்களுக்கோ வேறு எவருக்கோ பாதிப்பில்லை என்று கூறப்படுக்கிறது.