செய்திகள்

பாடசாலை ஆரம்பமாகும் நிறைவுறும் நேரங்களில் யாழில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்குத் தடை

பாடசாலைகள் ஆரம்பமாகும் நிறைவுறும் நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளன.வாகன நெரிசலைக் குறைக்கவும் விபத்துக்களைத் தவிர்க்கவுமே இந்தத் தடை விதிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரா அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்குத் தடை விதிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.அத்துடன் பாடசாலை ஆரம்பமாகும் நிறைவுறும் நேரங்களில் அவற்றின் முன்பாகப் போக்குவரத்துப் பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்படுவர்.

தற்போது அனைத்துப் பாடசாலைகளையும் மையப்படுத்தி விசேட ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரோந்துகளின் எண்ணிக்கையையும்,நேரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
யாழ்.நகர் நிருபர்-