செய்திகள்

பாண் விற்கும் இடங்களில் மே 1 முதல் தராசு இருக்க வேண்டியது கட்டாயம்

பேக்கரி உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் நுகர்வோர் தாம் கொள்வனவு செய்யும் பாண் உள்ளிட்ட பொருட்களின் நிறைகள் சரியாக இருக்கின்றதா என்பதனை அறிந்துக்கொள்ளும் வகையில் தராசு இருப்பதனை கட்டாயமாக்கும் சட்டத்தை  மே முதலாம் திகதிமுதல் கட்டாயமாக்கவதற்கு நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
ஒரு இராத்தல் பாணின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் சில இடங்களில் அவை குறைந்த நிறையில் விற்கப்படும் காராணத்தினாலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி தராசுகள் இல்லாத பேக்கரி உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாணின் நிறைக்கு ஏற்றவாறு விலையினை நிர்ணயம் செய்யுமாறு பேக்கரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அதனை செயற்படுத்த முடியுமா என அதிகாரசபை ஆராய்ந்து வருகின்றது.