செய்திகள்

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் முன் விசாரிக்க கோரிக்கை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கை மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் முன் விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபரால் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு சட்ட மா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக இதில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.