செய்திகள்

பாராளுமன்றத்தை கலைக்க சபாநாயகர் இணங்கினார் : எம்.பிக்கள் பலர் ஆதரவு

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ இன்று சபையில் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றம் கூடியபோது 7 எம்.பிக்கள் எழுந்து நின்று பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அவைத்தலைவர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அதன்போது அதற்கு விருப்பமானவர்களை எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வேளையில் அனேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவை தெரிவித்துள்ளனர்.  ஆனால் சுசில் பிரேம ஜயந்த , நிமல் சிறிபால டி சில்வா , விமல் வீரவன்ச , வாசுதேவ நாணயக்கார ஆகியோர் எழுந்து நிற்கவில்லை. இந்நிலையில் தற்போது கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்காக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன்.
அந்த கூட்டம் முடிந்த பின்னர் மீண்டும் சபை கூடவுள்ளது.