செய்திகள்

பார்வையற்றவர்கள் இலகுவாக வாக்களிக்க வாக்குச் சீட்டில் ‘பிரைல்’ முறையை உள்ளடக்க திட்டம்

பார்வையற்ற வாக்காளர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையில் வாக்குச் சீட்டில் ‘பிரைல்’ முறைமையையும்   உள்ளடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த முறைமையை அடுத்த தேர்தல் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அங்கவீனமான மற்றும் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இலகுவாக செல்லக் கூடிய வகையில் விசேட பாதை ஏற்பாடுகளையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.