செய்திகள்

பாலியல் ரீதியாக சிறுவனை துன்புறுத்திய இராணுவ சிப்பாய் கைது

நவகத்தேகம, கொன்கஸ்வெல பகுதியில் வைத்து 12 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகாம் ஒன்றில் விஜயபாகு படைப்பிரிவில் கடமையாற்றுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சிறுவனை ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.