செய்திகள்

பால்ட்டிமோர் நகரில் குழப்பநிலை

காவல்துறையினரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர் ஒருவர் பலியானதை தொடர்ந்து அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு ஊடரங்கு நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு வாரகாலத்திற்கு அவசரகால நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாதுகாப்பின் பொருட்டு அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவின் விசேட படையைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கறுப்பின அமெரிக்கரான 25 வயதுடைய பெட் க்ரே என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஒருவார காலத்தின் பின்னர் கடந்த 19ஆம் திகதி மரணமானர்.அவர் தாக்குதலுக்கு உள்ளாகி கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையிலேயே மரணமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் ஆறு காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்இந்த நிலையில்இ இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் கறுப்பின அமெரிக்கர்கள் காவல்துறையினரின் வாகனத்திற்கு தாக்கியதுடன் நகரத்தில் மத்தியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றுக்கும் தீ மூட்டினர்.இதனை தொடர்ந்து அங்கு குழப்பநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.